TAMIL
விராட் கோஹ்லியை விட சிறந்த வீரர்கள் எங்களிடம் உள்ளனர்! ஆதரவு தான் இல்லை… பிரபல வீரரின் பேச்சால் சர்ச்சை
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை விட சிறந்த வீரர்கள் பாகிஸ்தானில் இருப்பதாக பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஹார்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டராவதற்கு உதவ தயாராக இருப்பதாகவும், பும்ரா ஒரு குழந்தை பந்து வீச்சாளர் என்றும் முன்னதாக அவர் சர்ச்சையாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், இம்முறை விராட் கோஹ்லியை அவர் வம்பிழுத்துள்ளார்.
கோஹ்லி ஒரு சிறந்த வீரர் எனவும், ஆனால் அவரைக் காட்டிலும் சிறந்த வீரர்கள் பாகிஸ்தானில் இருப்பதாகவும் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கோஹ்லி அதிர்ஷ்டம் வாய்ந்தவர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு அவருக்குள்ளது.
ஆனால் கோஹ்லியை போல கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு இல்லாததால் பாகிஸ்தானில் பல திறமையான வீரர்கள் கவனம் பெறாமல் போகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.