TAMIL
இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழு பதவிக்கு எல்.சிவராமகிருஷ்ணன் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் (தெற்கு மண்டலம்), உறுப்பினர் ககன் கோடா (மத்திய மண்டலம்) ஆகியோரின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்கள் எல்.சிவராமகிருஷ்ணன் (தமிழ்நாடு), ராஜேஷ் சவுகான்
(சத்தீஷ்கார்), இடக்கை பேட்ஸ்மேன் அமய் குரேசியா (மத்தியபிரதேசம்) ஆகியோர் இந்திய அணியின் தேர்வு குழு பதவிக்கு விண்ணப்பித்து இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 54 வயதான எல்.சிவராமகிருஷ்ணன் 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர் ஆவார்.