TAMIL
சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது – சோயப் அக்தர் கிண்டல்
முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவில், சோயப் அக்தருக்கு பணம் தேவைப்படுவதால் இந்தியாவை புகழ்ந்து பேசுகிறார், என கூறியிருந்தார்.
இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், தற்போது இது குறித்து அக்தர் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
எனது நண்பர் சேவாக் பேசிய வீடியோ வைரலாகிவிட்டது.
ஒரு சாதாரண பையனான நான், சீரியஸாக இல்லாமல் தான் பேசினேன் என்பது சேவாக்கிற்கு தெரியும்.
ஆனால், அக்தருக்கு பணம் தேவை என்பதால் இந்தியாவை புகழ்கிறார் என அவர் பேசியுள்ளார்.
ஒருவரின் செல்வம் அல்லாவால் தான் கிடைக்கிறது; இந்தியாவால் அல்ல. சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட, (சேவாக் தலையில் முடி குறைவு) என்னிடம் அதிக பணம் இருக்கிறது.
நான் இதை வேடிக்கையாக தான் சொல்கிறேன், நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அக்தர் கூறி உள்ளார்.
Shoaib Akhtar clears all Misconceptions against him | My Analysis are Unbiased | Shoaib Akhtar