TAMIL
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: மேத்யூஸ் இரட்டை சதம்
ஹராரேயில் நடந்து வரும் ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 515 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
தனது முதலாவது இரட்டை சதத்தை ருசித்த மேத்யூஸ் 200 ரன்களுடன் (468 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்துள்ளது.
இன்று, கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.