TAMIL
இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி ஒருநாள் போட்டி: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்தியா
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது.
மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான மராட்டியத்தை சேர்ந்த பாபு நட்கர்னி(வயது 86) கடந்த 17 ஆம் தேதி மும்பையில் மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் மற்றும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் கையில் கறுப்பு பட்டை அணிந்து இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
மும்பைம் பூர்வீகமாக கொண்டநட்கர்னி 191 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளையும், 8,880 ரன்களையும் எடுத்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,414 ரன்கள் எடுத்துள்ளார்.
இவர் கடந்த 1964-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்துள்ளார்.