TAMIL
சரிப்பட்டு வராது… இதை நான் எதிர்க்கிறேன்.! துணிச்சலாக தனது கருத்தை கூறிய இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தன

டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களாக குறைக்க வேண்டும் என்ற திட்டம் குறித்து இலங்கை முன்னாள் அணித்தலைவரும், ஐசிசி கிரிக்கெட் ஆணையத்தின் உறுப்பினருமான மஹேல ஜெயவர்தன தனது கருத்ததை தெரிவித்துள்ளார்.
மார்ச் 27-31 வரை துபாயில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டங்களின் அடுத்த சுற்றில் இந்த திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று
விளையாட்டு நிர்வாகக் குழுவின் கிரிக்கெட் ஆணையத்தின் தலைவரான முன்னாள் இந்திய அணித்தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாள் விளையாட்டாக இருக்க வேண்டும், ஐசிசி கிரிக்கெட் ஆணையத்தின் அங்கமாக இருந்தாலும், வரவிருக்கும் கூட்டத்தில் டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களுக்கு குறைப்பது குறித்து விவாதிப்போம் என இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் எந்த மாற்றத்தையும் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாகக் கூறிய ஜெயவர்தன, கூட்டத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் அது ஐந்து நாட்கள் இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து, எந்த மாற்றத்தையும் நான் விரும்ப மாட்டேன் என்று கூறினார்.
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், ராகுல் டிராவிட் மற்றும் ஷான் பொல்லாக் போன்றவர்களும் இந்த குழுவில் உள்ளனர்.
முன்னதாக, இந்த யோசனைக்கு விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.