TAMIL

நியூசிலாந்து டி-20 அணியில் இணைந்த இலங்கை ஜாம்பவான்கள் முரளிதரன்-ஜெயவர்தனே: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நியூசிலாந்தின் ‘பிளாக் கிளாஷ்’ டி-20 போட்டியில் இலங்கை ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன் மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் டீம் ரக்பி அணியில் இணைந்துள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி நேப்பியர் மைதானத்தில் நடைபெறவுள்ள கண்காட்சி டி-20 போட்டியில் டீம் கிரிக்கெட்- டீம் ரக்பி அணிகள் மோதுகின்றன.



டீம் ரக்பி அணியில் விளையாடவுள்ள 47 வயதான இலங்கை ஜாம்பவான் முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தற்போது வரை அவர் சாதனையை எந்த பந்துவீச்சாளராலும் முறியடிக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி ஒரு நாள் போட்டியில் 534 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதற்கிடையில் 42 வயதான ஜெயவர்தன டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்கள் எடுத்த சில துடுப்பாட்டகாரர்களில் ஒருவர் ஆவார்.

மேலும், உலகெங்கிலும் உள்ள உள்நாட்டு தொடர்களில் சுமார் 200 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.



டீம் ரக்பி பயிற்சியாளர் சர் கிரஹாம் ஹென்றி கூறியதாவது, கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக அந்தஸ்து இருந்தபோதிலும், இருவருக்கும் ரக்பி விளையாட்டுன் நொறுங்கிய தொடர்புள்ளது.

இருவரும் ரக்பி வம்சாவளியைக் கொண்டிருக்காவிட்டால் எங்கள் அணிக்காக விளைாயடி இருக்கமாட்டார்கள்.

கொஞ்சம் கிரிக்கெட் விளையாடக்கூடிய இலங்கை ரக்பி வீரர்களைக் கொண்டிருப்பது என்பது எங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்று சர் கிரஹாம் கூறினார்.

இதற்கிடையில், இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக விளையாடுவது டீம் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிற்கு மிகுந்த சவாலாக இருக்கும்.

முரளி இன்னும் எனக்கு கவலையை தருகிறார், எனவே அவரை மீண்டும் எதிர்கொள்வது உண்மையிலே சவால் தான் என்று டீம் கிரிக்கெட் பயிற்சியாளரும் அணித்தலைவருமான ஸ்டீபன் பிளெமிங் ஒப்புக் கொண்டார்.



கடைசியாக நான் மஹேலாவுடன் விளையாடியபோது, அவர் உலகக் கோப்பை அரையிறுதியில் சதம் அடித்து அசத்தினார். இவர்களை விட சிறந்த வீரர்கள் டீம் ரக்பி அணிக்கு கிடைக்க முடியாது என பிளெமிங் புகழ்ந்துள்ளார்.

டீம் ரக்பி வீரர்கள் விபரம்:

ரிச்சி மெக்காவ், இஸ்ரேல் டாக், ஜேசன் ஸ்பைஸ், ஆஃபீசா டோனு, பியூடன் பாரெட், ஜோர்டி பாரெட், ஆரோன் ஸ்மித், பிராட் வெபர், கெய்லம் போஷியர், டெரன் விட்காம்ப், முத்தையா முரளிதரன், மஹேல ஜெயவர்தன.

டீம் கிரிக்கெட் வீரர்கள் விபரம்:

ஸ்டீபன் பிளெமிங், டேனியல் விக்டோரி, நாதன் ஆஸ்டில், கிராண்ட் எலியட், ஜேக்கப் ஓரம், ஹமிஷ் மார்ஷல், கிறிஸ் ஹாரிஸ், கைல் மில்ஸ், லூக் ரோஞ்சி, நாதன் மெக்கல்லம், மேத்யூ சின்க்ளேர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker