TAMIL
கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் ஜாம்பவானாக விளங்கும் இந்தியா
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கட்டாக்கில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா தனது 157வது வெற்றியை பதிவு செய்து உள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து 2019 டிசம்பர் 22 ஆம் தேதி (நேற்று) வரை இந்திய அணி விளையாடிய 249 ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 157 வெற்றிகளையும், 79 தோல்விகளையும் அடைந்துள்ளது.
(6 ஆட்டங்கள் ட்ரா, 7 ஆட்டங்களில் முடிவு தெரியவில்லை)
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வேறு எந்த அணியையும் விட இந்திய அணி அதிக வெற்றிகளை பெற்று மிகவும் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.
இந்திய அணியின் வெற்றி/தோல்வி விகிதம் 1.987 ஆக உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 216 போட்டிகளில் விளையாடி, அதில் 125 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வெற்றி/தோல்வி விகிதம் 1.582 ஆக உள்ளது.
இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தில் மொத்தம் 218 போட்டிகளில் விளையாடி, 123 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் வெற்றி/தோல்வி விகிதம் 1.500 ஆகும்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான ஒருநாள் தொடர்களையும் இந்திய அணியே (35 வெற்றிகள்) கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் (32 வெற்றிகள்), மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் (30 வெற்றிகள்) உள்ளது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது.
அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது.