TAMIL

டெஸ்டில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்: 73 ஆண்டு கால சாதனையை முறியடித்தார், சுமித்

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 23 ரன்கள் எடுத்த போது டெஸ்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்த இலக்கை வேகமாக எட்டிய வீரர் என்ற மகத்தான சாதனையை தன்வசப்படுத்தினார். 70-வது டெஸ்டில் ஆடும் சுமித் அதில் பேட்டிங் செய்த 126-வது இன்னிங்சில் இச்சாதனையை படைத்திருக்கிறார்.



இதற்கு முன்பு இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் தனது 131-வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை அடைந்ததே சாதனையாக இருந்தது. அவர் 1946-ம் ஆண்டில் இச்சிறப்பை பெற்றிருந்தார். அவரது 73 ஆண்டு கால சாதனையை சுமித் இப்போது முறியடித்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியாவின் ஷேவாக்கும் (134 இன்னிங்ஸ்), 4-வது இடத்தில் சச்சின் தெண்டுல்கரும் (136 இன்னிங்ஸ்), 5-வது இடத்தில் விராட் கோலியும் (138 இன்னிங்ஸ்) உள்ளனர்.

30 வயதான சுமித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 26 சதம், 27 அரைசதம் உள்பட 7,013 ரன்கள் (சராசரி 63.75) சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 50-வது வீரர் ஆவார். இவர்களில் 60 ரன்களுக்கு மேல் சராசரி கொண்ட ஒரே வீரர் சுமித் மட்டும் தான். டான் பிராட்மேனின் ஒட்டுமொத்த ஸ்கோரையும் (6,996 ரன்) சுமித் தாண்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker