TAMIL

7 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி

ஹாரிஸ் ஷீல்டுக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் ஒரு போட்டியில் சுவாமி விவேகானந்தா இண்டர்நேஷனல் பள்ளியும், குழந்தைகள் நலப் பள்ளியும் ஆசாத் மைதானத்தில் மோதின. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த சுவாமி விவேகானந்தா பள்ளி 39 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 761 ரன்கள் எடுத்திருந்தது.



அதிகபட்சமாக மீட் மாயேகர் என்ற மாணவர் அவுட் இல்லாமல் 134 பந்துகளுக்கு 338 ரன்கள் ( 56X4 7X6) எடுத்து இருந்தார்.கிருஷ்ணா பார்ட்டே 95 , இஷான் ராய் 67 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்த அணியின் சிறந்த வீரர்கள் மும்பை 16 வயதுக்குட்பட்ட அணி முகாமில் இருப்பதால் இந்த ரன்களை குவிக்க முடிந்தது.இந்த பள்ளியின் பழைய மாணவர்களில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து விளையாடிய குழந்தைகள் நல பள்ளி 7 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ரன்களும் 6 ஓய்டு மற்றும் ஒரு பை எக்ஸ்ட்ரா மூலம் கிடைத்தது ஆகும். பேட்டால் இந்த அணி பந்தை தொடக்கூட இல்லை. இதனால் விவேகானந்தா பள்ளி அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேகானந்தா பள்ளியின் அலோக் பால் 3 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுளை எடுத்தார். விரோத் வசி 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார். மற்றும் 2 ரன் அவுட்டுகள்.

சுருக்கமான ஸ்கோர் : 39 ஓவர்களில் விவேகானந்தா பள்ளி 761/4 (மாயேகர் 338 ஆட்டமிழக்காமல், கிருஷ்ணா பார்ட்டே 95, இஷான் ராய் 67) குழந்தைகள் நல பள்ளி 7 (அலோக் பால் 6/3, வரோட் வேஸ் 2/3) ஐ 754 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker