TAMIL
ஐ.பி.எல் ஏலத்திற்கு முன் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு விவரம்
2020 ஆம் ஆண்டு 13-வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல் , கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய ஐபிஎல் அணிகள் தக்கவைத்த, விடுவிக்கப்பட்ட மற்றும் வர்த்தகம் செய்யப்பட்ட வீரர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டு உள்ளன.
வெளிநாட்டு வீரர்கள் 35 பேர் உள்பட மொத்தம் 127 கிரிக்கெட் வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கைவைசம் உள்ள தொகை ரூ.14.60 கோடி, ஏலம் எடுக்கக்கூடிய வீரர்கள் 5, இதில் வெளிநாட்டு வீரர்கள் 2 பேரை எடுக்கலாம்.
டெல்லி கேப்பிடல்ஸிடம் உள்ள தொகை ரூ.27.85 கோடி, மொத்தம் 11 வீரர்களை ஏலம் எடுக்கலாம். இதில் 5 வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்கலாம்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம்தான் அதிகபட்சத் தொகையான ரூ.42.70 கோடி கைவசம் உள்ளது. மொத்தம் 9 வீரர்களை ஏலம் எடுக்கலாம், 4 வெளிநாட்டு வீரர்களுக்கு இடமுண்டு.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் உள்ள தொகை ரூ.35.65 கோடி, 11 வீரர்களை எடுக்கலாம், 4 வெளிநாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு உண்டு.
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.13.05 கோடி, 7 வீரர்களை ஏலம் எடுக்கலாம். 2 வெளிநாட்டு வீரர்களுக்கான இடமுண்டு.
ராஜஸ்தான் ராயல்ஸிடம் உள்ள தொகை ரூ.28.90 கோடி, 11 வீரர்களை ஏலம் எடுக்கலாம். 4 வெளிநாட்டு வீரர்களுக்கு இடமுண்டு.
ஆர்சிபியிடம் உள்ள தொகை, ரூ.27.90கோடி, மொத்தம் 12 வீரர்களை எடுக்கலாம், 6 வெளிநாட்டு வீரர்களுக்கு இடமுண்டு.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் கைவைசம் உள்ள தொகை ரூ.17 கோடி, 7 வீரர்களை ஏலம் எடுக்கலாம், 2 வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம்.