TAMIL
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில் அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தேநீர் இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 59 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து இருந்தது. தேநீர் இடைவேளை சமயத்தில் மழை பெய்ததால், ஆட்டம் மீண்டும் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.