TAMIL
20 ஓவர் கிரிக்கெட்: அதிகமான ரன்களைக் தக்கவைப்பது விராட் கோலியா, அல்லது ரோகித் சர்மாவா?
பெங்களூரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. மேலும் இந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில், மொஹாலியில் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 72 ரன்கள் சேர்த்து ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தார். ரோகித் சர்மா 89 இன்னிங்ஸ்களில் 2,434 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது விராட் கோலி 66 இன்னிங்ஸ்களில் 2,441 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதனையடுத்து ரோகித் சர்மா இன்னும் 8 ரன்கள் எடுத்தால், விராட் கோலியின் சாதனையை முறியடிக்கலாம். மேலும் ரோஹித் சர்மா இந்த 8 ரன்களுக்கு மேல் நல்ல ஸ்கோரை அடித்தால் தான் கோலிக்கு நெருக்கடி அளிக்க முடியும்.
ஒருவேளை 8 ரன்களுக்கு மேல் எடுத்து குறைவான ஸ்கோரில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தால் அடுத்த வரிசையில் களமிறங்கும், விராட் கோலி எளிதாக ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்து தனது முதலிடத்தைத் தக்கவைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே இன்று நடைபெறும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகமான ரன்களைக் தக்கவைப்பது விராட் கோலியா, அல்லது ரோகித் சர்மாவா என்பது போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.