TAMIL

கிரிக்கெட் விளையாடும் போது பந்து பட்டு பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை!

சென்னை துறைமுக கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கடற்படை வீரர், பந்து நெஞ்சில் பட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படை போர் கப்பலான (Car Nicobar) நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த கப்பற்படை வீரர்கள் ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.



இந்த நிலையில் கப்பலில் பணியாற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோகேந்தர் சிங்(24), விவேக்(26), கமல்(21), விஷ்வா குமார்(22) ஆகியோர் அங்கிருந்த சிலருடன் நேற்று மாலை 3.30 மணியளவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர்.அப்போது விவேக் வீசிய பந்து ஜோகேந்தர் சிங்கின் நெஞ்சில் பட்டதில், அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். இத்னை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாலை 5 மணிக்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இறந்து போன ஜோகிந்தர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவருக்கு கடந்த மே மாதம்தான் திருமணம் நடந்தது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker