அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குயின்டன் டி காக் 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.
ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவர் 36 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் விளாசினர்.
அதன்பின் அந்த்ரே ரஸல் தொடர்ந்து விக்கெட் வீழ்த்த மும்ப இந்தியன்ஸ் சரியாக 20 ஓவரில் 152 ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த்ரே ரஸல் 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னிலும், குருணால் பாண்ட்யா 15 ரன்னிலும், மார்கோ ஜென்சன் 0 ரன்னிலும், ராகுல் சாஹர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.