CRICKETLATEST UPDATESNEWSTAMIL
கிரிக்கெட் வீரர் லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட், ஒரு நாள், ரி20 போட்டித் தொடர்களில் பெயரிடப்பட்டுள்ள அணி வீரர்களுக்கு நேற்றையதினம் (21) மேற்கொண்ட PCR பரிசோதனையில் இவ்விடயம் அறிய வந்துள்ளதாக, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக லஹிரு குமார சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, இலங்கை தேசிய பிரதான அணியில் அங்கம் வகிக்கம் வீரரான லஹிரு திரிமான்னவுக்கும், பயிற்சியாளர் மிக்கி ஆத்தருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை அணியைச் சேர்ந்த பினுர பெனாண்டோ, சாமிக கருணாரத்ன ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் அதிலிருந்து குணமடைந்திருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக, இலங்கை அணி நாளை அதிகாலை (23) மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.