FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL
இந்தியன் சூப்பர் லீக் : ஐதராபாத் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. இன்று மோதல்
![](https://iespnsports.com/wp-content/uploads/2021/02/image_2021-02-16_142650.png)
கோவா,
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில், நேற்று இரவு நடந்த 95-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 5-வது வெற்றியை பதிவு செய்த்து. அரைஇறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்ட மும்பை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.