CRICKETLATEST UPDATESNEWS

காலே டெஸ்டில் ஜோ ரூட் அபாரம் – 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/9

 
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. திரிமானே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் சண்டிமால் அரை சதமடித்து 52 ரன்னில் வெளியேறினார். 
 
மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி சதமடித்து 110 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்னில் டிக்வெல்லா ஆட்டமிழந்தார். தில்ருவான் 67 ரன்கள் அடித்து வெளியேறினார்.
 
இறுதியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 139.3 ஓவரில் 381 ரன்கள் எடுத்துள்ளது.
 
இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன்6 விக்கெட்டும், மார்க் வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோவ் 24 ரன்னுடனும், ஜோ ரூட் 67 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பேர்ஸ்டோவ் 26 ரன்னில் வெளியேறினார். டேனியல் லாரன்ஸ் 3 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோஸ் பட்லர் அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார்.
 
முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜோ ரூட் இந்த போட்டியிலும் அபாரமாக விளையாடினார்.
 
சாம் கரன் 12 ரன்னிலும், டொம்னிக் பெஸ் 32 ரன்னிலும், மார்க் வுட் 1 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசியில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் 186 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
 
இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்டெனியா 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker