CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஷுப்மான் கில்லுக்கு இப்படி நடந்தால் அது மிகப்பெரிய அநியாயம்: கவுதம் கம்பீர்
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட்நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது இளம் வீரரான ஷுப்மான் கில் இந்திய அணியில் அறிமுகம் ஆக இருக்கிறார்.
விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாத நிலையில் பிரித்வி ஷா நீக்கப்பட்டார். இதனால் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ஷுப்மான் கில் 5 அல்லது 6-வது இடத்தில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரஹானே ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க முடிவு செய்துள்ளார். இதனால் கேஎல் ராகுலுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆகவே ஷுப்மான் கில் மயங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
ரோகித் சர்மா 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதனால் ஷுப்மான் கில்லின் நிலைமை 3-வது டெஸ்டில் என்ன ஆகும்? என்பது கேள்விக்குறி.
இந்த நிலையில் உயர்ந்த நிலையை அடைய ஷுப்மான் கில்லுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில் ‘‘ஷுப்மான் கில் தொடக்க பேட்ஸ்மேனாக ஜொலிப்பரா என்பதற்கு நேரம் மட்டுமே பதில் சொல்லும். ஆனால், பாக்சிங் டே டெஸ்டில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்திருப்பது, அதைவிட பெரியது ஏதும் இருக்க முடியாது.
அணி நிர்வாகம் மீண்டும் அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் களம் இறக்காது என நம்புகிறேன். நம்பிக்கை வைத்து அவரை எடுக்க வேண்டும். ஒருவர் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தால் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நீங்கள் நம்பிக்கையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அவரை தேர்வு செய்ததன் மூலம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை வைத்திருப்பார்கள் என்பதில் நன் உறுதியாக இருக்கிறேன். ரோகித் சர்மா வந்தால் கூட, அவரை எதாவது ஒரு பேட்டிங் ஆர்டரில் களம் இறக்க வேண்டும்.
ஷுப்மான் கில் தொடக்க வீரராக களம் இறங்கி 20 முதல் 30 ரன்கள் அடித்தபின், திடீரென ரோகித் சர்மா வந்தபின் ஆடும் லெவனுக்கு வெளியே கில்லை அவரை காண்பது மிகவும் ஏற்கத்தக்க கூடியதாக இருக்காது.
அவருக்கும் நியாயமாக இருக்காது. அவரை தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டால், டோனி தலைமையின் கீழ் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்தது போன்று அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.