CRICKETLATEST UPDATESNEWSTAMIL
3 நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டம்: 194 ரன்னில் சுருண்ட இந்தியா
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டி பகல்-இரவு டெஸ்ட் ஆக நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.
இந்த ஆட்டம் இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால் 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். பிரித்வி ஷா, ஷுப்மான் கில் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரித்வி ஷா 40 ரன்னிலும், ஷுப்மான் கில் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த ஹனுமா விஹாரி 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மிடில் ஆர்டர் வரிசையில் ரகானா (4), ரிஷப் பண்ட் (5), சகா (0) சைனி (4), முகமது ஷமி (0) ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தார். பும்ரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் அடிக்க இந்தியா முதல் இன்னிங்சில் 194 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் சீன் அப்போட், ஜேக் வைல்டர்முத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.