CRICKETLATEST UPDATESNEWSTAMIL
அடுத்த இரண்டு டி20 போட்டியில் ஜடேஜா அவுட், ஷர்துல் தாகூர் இன்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கான்பெர்ராவில் நடைபெற்றது. பேட்டிங் செய்யும்போது இந்திய அணியின் ஜடேஜா காயம் அடைந்தார். முதலில் ஹாம்ஸ்டிரிங் காயம் அடைந்தார். அதன்பின் ஸ்டார்க் பவுன்சர் பந்து ஹெல்மெட்டை தாக்கி கன்கசன் ஆனார்.
இந்த நிலையில் மீதமுள்ள இரண்டு டி20 போட்டியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.