CRICKETLATEST UPDATESNEWSTAMIL
கொடுத்த துட்டுக்கு சரியான நேரத்தில் கரெக்ட்டாக வேலைப்பார்த்த கம்மின்ஸ்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவராக பேட் கம்மின்ஸ் திகழ்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவரை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகள் கடும் போட்டியிட்டன. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.
ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 14 லீக் ஆட்டங்கள். ஒரு போட்டியில் 4 ஓவர்கள் வீசலாம். அப்படி என்றால் பேட் கம்மின்ஸ் 56 ஓவர்களில் 336 பந்துகள் வீச முடியும். ஒரு பந்துக்கு சுமார் 4.61 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவார்.
ஐபிஎல் தொடக்கத்தில் அவரது பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை. ரன்கள் வாரிக்கொடுத்தார். இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். முதல் 10 போட்டிகளில் மிகவும் சொற்ப விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
கடைசி நான்கு போட்டிகளில் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான வாழ்வா? சாவா? போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதனால் கொல்கத்தா ரசிகர்கள் கொடுத்த துட்டுக்கு கரெக்ட்டாக வேலை பார்த்துள்ளதாக கம்மின்ஸை பாராட்டியுள்ளனர்.