ஐ.பி.எல் கிரிக்கெட்டில், சார்ஜாவில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
அந்த ஜோடியில் ஷிகார் தவான் 26(16) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார்.
அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் பிரித்வி ஷா அரைசதம் கடந்த நிலையில் 66(41) ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரைசத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யருடன், ரிஷாப் பாண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டினர்.
இந்த ஜோடியில் ரிஷாப் பாண்ட் 38(17) ரன்களில் கேட்ச் ஆனார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் 88(38) ரன்களும், ஹெட்மயர் 7(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 000 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசூல் 2 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, நாகர்கோடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணிக்கு 229 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.