ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி அசத்திய சென்னை அணி, கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.
இதனால், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை அணி இந்த போட்டியை எதிர்கொள்கிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது. இதனால், வெற்றியை தக்க வைக்க அந்த அணி முயற்சிக்கும்.
இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, டெல்லி அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பந்து வீசுகிறது.