TAMIL
அப்ரிடி, கம்பீர் மோதல் போக்கை கைவிட வேண்டும்: வக்கார் யூனிஸ் வேண்டுகோள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் ஆன்லைன் மூலம் அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போது அப்ரிடி (பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்), கவுதம் கம்பீர் (இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்) இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்கள் சமூக வலைதளம் மூலம் நடைபெற்று வருகிறது.
இருவரும் புத்திசாலித்தனமாகவும், விவேகமாகவும், பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
நீண்ட காலமாக நிலவும் இந்த பிரச்சினை மேலும் நீடிக்குமானால் இருவரும் எங்காவது சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ரசிகர்களை இழக்காமல் இருக்க இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே வழக்கமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும்.
இன்னும் சில வருடங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.