TAMIL
அர்ஜூனா விருதுக்கு பும்ராவின் பெயரை பரிந்துரை செய்ய முடிவு?
இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க தொடங்கி உள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியம், தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கும் 26 வயதான ஜஸ்பிரித் பும்ராவின் பெயரை இந்த விருதுக்கு சிபாரிசு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்கள் அனுப்பப்பட்டன.
இதில் ஜடேஜா அர்ஜூனா விருதை தட்டிச் சென்றார். இந்த தடவை பும்ராவுக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.