TAMIL
வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்
கொரோனா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய நேரத்தை வீட்டிலேயே செலவழித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது, வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வீடியோவில், ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து ஒரு டென்னிஸ் பந்தை சுவருக்கு எதிராக அடித்து பயிற்சி செய்கிறார்.
“கை-கண் ஒருங்கிணைப்பைத் தொடர சிறிய ஐ சோ பேட்டிங் பயிற்சி என்று தலைப்பிற்கு ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராம் வீடியோவில் பெயரிட்டுள்ளார்.