TAMIL
பாகுபலி கட்டப்பாவாக மாறிய கபில்தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். இவரின் தலைமையில் கடந்த 1983 இல் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்தநிலையில் கொரொனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கபில்தேவ் தனது தலையை முழுமையாக மொட்டையடித்துள்ளார். மேலும் சன்கிளாஸ் அணிக்கு கருப்பு நிற பிளேசர் அணிந்துள்ளார்.
தனது புது கெட்டப்பை சமூக வலைதளமான டுவிட்டரில் பகிந்துள்ளார்.
Article on Kapil Dev's Look.https://t.co/UJI8aqQ1y8@therealkapildev @KapilSharmaK9
— Chetan Sharma (@chetans1987) April 21, 2020