TAMIL
ஊரடங்கு: ஓன்லைன் மூலம் கிரிக்கெட் கோச்சிங் நடத்தும் டோனி,அஸ்வின்!
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் டோனி,அஸ்வின் இருவரும் ஓன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால், உலகின் பல நாடுகளில், முடங்கிபோய்யுள்ளன. இதனால், பல நாடுகளில் நடைபெற இருந்த விளையாட்டுப்போட்டிகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. அதில்,இந்தியாவில் ஐ.பி.எல் போட்டியும் அடங்கும்.
இந்நிலையில், இந்திய வீரர்களான அஸ்வின் மற்றும் டோனி ஆகியோர், ஓன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி வழங்கி வருகின்றனர்.
இதுவரும் தனிதனியே வைத்துள்ள கிரிக்கெட் பயிற்சி அக்காடமி மூலம் இது நடைபெற்று வருகிறது. இதில், டோனி நேரடியாக பயிற்சி வழங்கவில்லை.
அவர், தனது அக்காடமியில் சமூகவலைதளங்கள் மூலம் நடைபெறும் பயிற்சியை கவனித்து வருகிறார்.
அஸ்வின் தனது அக்காடமியில், உள்ள பயிற்சியாளர்களிடம் இது குறித்து விரிவான தகவல்களை கேட்டறிந்து வருகிறார்.
இருவரும் இந்த ஊரடங்கில் உற்சாகமூட்டும் வகையில் பயிற்சிகளை வழிநடத்தி வருகின்றனர்.