TAMIL
தூங்கி எழுந்ததும் காய்ச்சல் ஏற்பட்டது! தொடர் இருமல்… பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்ட முக்கிய பதிவு
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தன்னிடம் காணப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்திருக்கலாம் அதனால் தான் அவர்,பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுச்சென்றிருக்கக்கூடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்ரமீஸ் ராஜா கருத்து தெரிவித்திருந்தார்.
இது உலக கிரிக்கெட்வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் தன்னிலை விளக்கம் ஒன்றை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், மற்ற வெளிநாட்டு வீரர்களை போலவே நானும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 தொடரில் இருந்து வெளியேறினேன்.
ஏனெனில் கொரோனா உலகம் முழுவதும் பரவி வருவதால் இந்த சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பதை விட குடும்பத்தினருடன் இருப்பதே முக்கியமானது என்பதை உணர்ந்தேன்.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் நான் இங்கிலாந்து திரும்பினேன். அப்போது உடல் நிலை ஆரோக்கியமாக இருந்தது. வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.
இருப்பினும் ஞாயிற்றுகிழமை எழுந்த போது காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல்களின் படி என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.
இதன் தொடர்ச்சியாக வறண்ட மற்றும் தொடர்ச்சியான இருமல் உள்ளது.
தற்போதைய சூழலில் பரிசோதனை செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.
இன்றைய நாளின் பிற்பகுதியில் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.
அப்போது தான் எனது உடல்நிலை குறித்துஉறுதியான தகவலை பெறமுடியும் என தெரிவித்துள்ளார்.