TAMIL
டெங்கு காய்ச்சலால் அவஸ்தையடையும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!

டெங்கு காய்ச்சலால் இரண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்லா விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 20 வீரர்களின் ஆரம்ப அணியில் நீரோஷன் டிக்வெல்லா ஒரு பகுதியாக உள்ளார்.
இதற்கு முன்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆல் ரவுண்டர் காமின்டு மெண்டிஸ், இன்றைய பயிற்சி ஆட்டத்தை தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.