SCHOOL SPORTSTAMIL
350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கையை சேர்ந்த வீரர்! 24 வருட சாதனையை முறியடித்தார்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை சேர்ந்த வீரர் அவிஷ்க தரிந்து 350 ஓட்டங்களை குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பாடசாலைகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போதே அவிஷ்க இந்த ஓட்டங்களை விளாசினார்.
லும்பினி கல்லூரிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வத்தளை சென். அந்தனிஸ் கல்லூரி வீரர் அவிஷ்க தரிந்து 285 பந்துகளில் 350 ஓட்டங்களை பெற்றார்
இதில் 56 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.
அவிஷ்க குவித்த இந்த ஓட்டங்கள் பாடசாலைகள் கிரிக்கெட்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஒரு வீரர் பெற்ற அதிக ஓட்டமாகும்
இதற்கு முன் தம்மிக்க வாஸ் என்ற வீரர் கடந்த 1996ல் 310 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்த நிலையில் அவிஷ்க அதை முறியடித்துள்ளார்.