TAMIL
போட்டியின் போது உயிரிழந்த சகோதரி: வேதனை செய்தியுடன் உலககோப்பையை வென்ற கேப்டன்
19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியின்போது, சகோதரி உயிரிழந்த சோகத்துடனே வங்கதேச அணியின் கேப்டன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில், அக்பர் அலி தலைமையிலான வங்கதேச அணி, இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
ஆனால் இந்த தொடரின் போது, அக்பர் அலி தனது சகோதரியை இழந்து அந்த வேதனையுடனே விளையாடியதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
டாக்காவில் உள்ள ஒரு உள்ளூர் வலைத்தளம் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட செய்தியில், நான்கு சகோதரர்களுடன் கடைசியாக பிறந்த அவருடைய சகோதரி இரட்டை குழந்தை பெற்றெடுத்தபோது உயிரிழந்துள்ளார்.
கவனம் சிதறிவிடுமோ என்கிற அச்சகத்தில் இந்த செய்தியை அவருடைய குடும்பத்தினர், அக்பர் அலிக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் உடனான போட்டி மழையால் ரத்து செய்யபட்டிருந்தபோது, அவர் எப்படியோ இந்த செய்தியை தெரிந்துகொண்டு, வீட்டிற்கு போன் செய்து பேசியுள்ளார்.
அந்த வருத்தத்தை சக வீரர்களிடம் கூட தெரிவிக்காமல் வேதனையுடனே விளையாடி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.