டிசம்பர் 19ம் திகதி கொல்கத்தாவில் நடந்து முடிந்த ஐபிஎல் 2020 ஏலத்திற்கு முன் நடந்த மாதிரி ஏலத்தில் பெங்களுர் அணி இலங்கை வீரர் உதானாவை 9 கோடிக்கு வாங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2020 ஏலத்தில், எட்டு அணிகளின் உரிமையாளர்களும் சிறந்த வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.
ஏலத்திற்கு முன் 8 அணிகளும் ஆண்டு முழுவதும் ஆலோசித்து வீரர்களை வாங்க நிறைய திட்டமிட்டு கடுமையாக உழைத்துள்ளனர்.
ஐபிஎல் பட்டத்தை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் கொல்கத்தாவில் பெரிய அளவிலான பணத்தை செலவிட்டது.
விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களுர் அணி தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ .10 கோடிக்கு வாங்கியது.
டிசம்பர் 19 நிகழ்வுக்கு முன்னதாக மாதிரி ஏலங்களையும் பெங்களுர் அணி நடத்தியுள்ளது.
அணியின் அதிர்ஷ்டத்தை மாற்றியமைக்க, பெங்களுர் உரிமையாளர்கள் மைக் ஹெஸனை கிரிக்கெட் இயக்குநராக ஏற்றிக்கொண்டனர்.
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் கட்டிச் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஏலத்திற்குப் பிறகு, பெங்களுர் அணி அவர்களின் மாதிரி ஏலத்தைப் பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், ஏலத்தில் இலங்கை பந்து வீச்சாளர் இசுரு உதனாவுக்கு பெங்களுரு அணிக்காக ஏன் வாங்க வேண்டும் என்பது குறித்து மற்ற பயிற்சி ஊழியர்களுடன் ஹெசன் தீவிர விவாதம் நடத்துவதைக் காணலாம்.
மாதிரி ஏலத்தில், பெங்களுர அணி உதானாவை ரூ .9 கோடிக்கு வாங்கியது. ஆனால், உண்மையில் பெங்களுரு அணி உதானாவை ரூ .50 லட்சத்திற்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.