CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
8 வெற்றிகள் பெற்றும் மும்பை இந்தியன்ஸ் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய வில்லையாம்: காரணம்?
ஐபிஎல் தொடர் தொடங்கியபோது முதல் 12 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 8 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. இதனால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடர் செல்ல செல்ல மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி அணிகள் ஆதிக்கம் செலுத்தின. என்றாலும் கடைசி சில போட்டிகளில் இந்த மூன்று அணிகளும் தோல்வியை சந்தித்தன.
வழக்கமாக 8 போட்டிகளில் வெற்றி 16 புள்ளிகள் பெற்றாலே பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். ஆனால் ஆர்சிபி வீழ்த்தி 8 வெற்றிகள் பெற்ற போதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கபடவில்லை.
இதற்கு காரணம் உள்ளது. 8 அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆர்சிபி, டெல்லி அணிகள் 7 வெற்றிகள் பெற்றுள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 6 வெற்றிகள் பெற்றுள்ளன.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐந்து வெற்றிகள் பெற்றுள்ளன.
மும்பை அடுத்த இரண்டு போட்டிகளில் டெல்லி, ஐதராபாத்திடம் தோல்வியடைந்தால் 16 புள்ளிகளுடன் இருக்கும்.
கொல்கத்தா சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளை வீழ்த்தினால் 16 புள்ளிகள் பெறும், ஆர்சிபி ஐதராபாத், டெல்லியை வீழ்த்தினால் 20 புள்ளிகள் பெறும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராஜஸ்தான், சிஎஸ்கே அணிகளை வென்றால் 16 புள்ளிகள் பெறும்.
டெல்லி மும்பையை வீழ்த்தினால் 16 புள்ளிகள் பெறும். இதனால் மும்பை இந்தியன்ஸ் இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் நெட் ரன்ரேட் அதிகமாக இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கவலை இல்லை.