TAMIL

7 சிக்ஸ்.. 10 பவுண்டரி.. பாகிஸ்தானில் பட்டையை கிளப்பிய சங்கக்காரா-போபரா! எம்சிசி அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சங்கக்காரா தலைமையிலான மெர்லிபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அணி கடைசி டி-20 போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டியில் விளையாட சங்கக்காரா தலைமையிலான எம்சிசி அணி இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.



பெப்ரவரி 14ம் திகதி லாகூரில் நடந்த முதல் டி-20 போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் எம்சிசி வீழ்த்தியது.

பெப்ரவரி 16ம் திகதி நடந்த ஒரு நாள் போட்டியில் எம்சிசி-யை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி வீழ்த்தியது. 17ம் திகதி நடந்த 2வது டி-20 போட்டியில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எம்சிசி-யை வென்றது நார்தன் அணி.

இதனையடுத்து, சுற்றுப்பயணத்தின் கடைசி மற்றும் 3வது டி-20 போட்டி 19ம் திகதி லாகூரில் நடந்தது.

இதில், சங்கக்காரா தலைமையிலான எம்சிசி, சாகித் அப்ரிடி தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற முதலில் துடுப்பெடுத்தாடிய எம்சிசி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது.





சங்கக்காரா 35 பந்தில் 3 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசி 52 ஓட்டங்கள் எடுத்தார். போபரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 4 சிக்ஸர், 7 பவுண்டரி விளாசி 70 ஓட்டங்கள் குவித்தார்.

முல்தான் சுல்தான்ஸ் தரப்பில் அலி ஷபிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ், 17வது ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் கடைசி டி-20 போட்டியில் எம்சிசி அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தியது. எம்சிசி-யின் ரவி போபராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.



3 டி-20 போட்டியில் எம்சிசி 2 வெற்றி, 1 தோல்வி பெற்றது. ஒரு ஒருநாள் போட்டியில் தோல்வி என மொத்தம் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடிய நான்கு போட்டியில் 2 வெற்றி, 2 தோல்வியை பெற்றது எம்சிசி.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker