FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL
643 கோல்கள் அடித்து பீலே சாதனையை சமன் செய்த மெஸ்சி
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா – வாலன்சியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
இந்த போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணிக்காக அவர் அடித்த 643-வது கோலாகும்.
இதன்மூலம் மெஸ்சி பிரேசில் கால்பந்து சகாப்தம் பீலேயின் சாதனையை சமன் செய்தார்.
பீலே 15 வயதில் சாண்டோஸ் கிளப்புக்காக விளையாட தொடங்கினார். 1956-ல் அந்த கிளப்பில் சேர்ந்தார். 1974 வரை பிரேசிலுக்காக அவர் பல சர்வதேச போட்டிகளில் விளையாடினார். பீலே சாண்டோஸ் கிளப்புக்காக 665 ஆட்டங்களில் விளையாடி 643 கோல்கள் அடித்துள்ளார்.
மெஸ்சி தனது 17-வது வயதில் 2004-ல் பார்சிலோனா கிளப் பில் சேர்ந்தார். அவர் 748 போட்டிகளில் 643 கோல்களை அடித்து பீலேயை சமன் செய்துள்ளார்.
10 லாலீகா பட்டங்களையும், 4 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் பார்சிலோ அணி வெல்ல மெஸ்சி முக்கிய வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.