TAMIL

6 பந்துக்கு 6 சிக்ஸர்… நியூசிலாந்து மண்ணில் யுவராஜ் சிங்கை கண்முன் கொண்டு வந்த வீரர் வீடியோ

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் லியோ கார்ட்டர் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் Canterbury Kings அணியும் Northern Knights அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய Northern Knights அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் எடுத்தது.



அதன் பின் ஆடிய Canterbury Kings அணி 18.5 ஓவரிலே 3 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் Canterbury Kings அணிக்காக விளையாடிய Leo Carter 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்துள்ளார். இதன் மூலம் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்த 7-வது வீரர் என்ற சாதனையை லியோ கார்ட்டர் படைத்துள்ளார்.

29 பந்துகளை சந்தித்த லியோ கார்ட்டர் 70 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடங்கும்.



இந்திய அணியின் யுவராஜ் சிங், தென் ஆப்பிரிக்காவின் ஹெர்சல் ஹிப்ஸ் ஆகியோர் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker