ஐபிஎல் 2020 ஏலத்தில் இங்கிலாந்து வீரர் சாம் குரனை சென்னை சூப்பர் கிங்ஸ் 5.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
முந்தைய ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியில் விளையாடிய 21 வயதான சாம் குரன், சென்னையின் அணித்தலைவர் டோனி மற்றும்
பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கின் அறிவுரைகளை கிடைக்கும் வாய்ப்பாக அணியில் இணைந்ததில் மகிழ்ச்சிடைவதாக தெரிவித்துள்ளார்.
எங்கள் தலைவர் டோனியின் கீழ் மற்றும் எங்கள் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங்கின் கீழ் விளையாடவும், சென்னைக்கு வந்து எனது புதிய அணியினர் அனைவரையும் சந்திக்க காத்திருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அவர்களின் அறிவு கிடைப்பதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும், மேலும் கோப்பையை மீண்டும் சென்னைக்கே கொண்டு வர முடியும் என குரன் பேசிய வீடியோவை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மூன்று முறை போட்டியை வென்ற ஒரு புதிய அணியில் விளையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக குரன் கூறினார்.
ஐபிஎல் அடுத்த சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸில் சேர உற்சாகமாக இருக்கிறேன்.
பயிற்சியாளர், நிர்வாக ஊழியர்களுக்கு மிக்க நன்றி.
சென்னையில் உள்ள ரசிகர்களின் முன்னால் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நான் சில ஆச்சரியமான விஷயங்களை உணர்ந்தேன், கடந்த ஆண்டு சென்னைக்கு எதிராக விளையாடியது எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன், இந்த ஆண்டு சொந்த ரசிகர்களின் முன்னால் விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ரசிகர்களுக்காக சில சிறந்த விளையாட்டை நாங்கள் விளையாவோம் என்று நம்புகிறோன் என்று சாம் குரன் கூறினார்.
Kadai Kutty Singham @CurranSM pounces straight to the point and how! #WhistlePodu #SuperFam ?? pic.twitter.com/XhfC5hKC8G
— Chennai Super Kings (@ChennaiIPL) December 21, 2019