TAMIL
5வது 20 ஓவர் போட்டி; இந்தியா 163/3
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரு ஆட்டங்களில் சூப்பர் ஓவர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தியது.
இதனால் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடந்து வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி களமிறங்கவில்லை.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
சஞ்சு சாம்சன் 2 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
மறுபுறம் ராகுலுடன் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கி விளையாடினார்.
இதில், ராகுல் 45 (33 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரோகித் 60 (41 பந்துகள்) எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் ஆனார்.
தொடர்ந்து துபே 5 (6 பந்துகள்) ரன்களில் வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் சந்தோஷ் 33 மற்றும் மணீஷ் கிருஷ்ணானந்த் 11 (4 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.
இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.