TAMIL
4வது டி-20 போட்டி: குற்றத்தை ஒப்புக்கொண்ட கோஹ்லி.. இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு
வெலிங்டனில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான நான்காவது டி-20 போட்டியின் போது சரியான நேரத்திற்குள் ஓவர்கள் முடிக்க தவறியதற்காக இந்தியாவுக்கு சம்பளத்திலிருந்து 40 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் முன்மொழியப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டார், எனவே முறையான விசாரணை தேவையில்லை.
கள நடுவர்கள் கிறிஸ் பிரவுன் மற்றும் ஷான் ஹெய்க் மற்றும் மூன்றாவது நடுவர் ஆஷ்லே மெஹ்ரோத்ரா ஆகியோர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிக்கையில் கூறியது.
வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.22 க்கு இணங்க, வீரர்கள் ஒவ்வொரும் 20% போட்டி சம்பளத்தில் அபராதம் விதிக்கப்படுகிறார்கள்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.
ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2ம் திகதி மௌன்கானுய் மவுண்டில் நடைபெறவுள்ள இறுதி டி-20 சர்வதேச போட்டியில், நியூசிலாந்தை
வீழ்த்தி தொடரை 5-0 என்ற கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்போடு இந்தியா உள்ளது.
நியூசிலாந்து சொந்த மண்ணில் ஒருபோதும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டபோட்டிகள் கொண்ட டி-20 தொடரில் அனைத்து ஆட்டங்களையும் இழந்ததில்லை.
2005 ஆம் ஆண்டு முதல், அவர்கள் சொந்த மண்ணில் டி20 தொடரில் ஒரு முறை மட்டுமே அனைத்து ஆட்டங்களையும் இழந்துள்ளனர், பிப்ரவரி 2008ல் இங்கிலாந்திடம் 2-0 என தொடரை இழந்துள்ளனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.