TAMIL

3 பேர் ‘டக் அவுட்’.. லஹிரு குமாரா, லசித் எம்புலடேனியா அபார பந்துவீச்சு! பாகிஸ்தானை சுருட்டியது இலங்கை

கராச்சியில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் பாகிஸ்தான் அணியை முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு சுருட்டியது இலங்கை.

ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் இரண்டு போட்டித் தொடர்களில் பங்கேற்க இலங்கை அணி 2019 டிசம்பர் 08ம் திகதி பாகிஸ்தானுக்கு புறப்பட்டது.



ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் டிராவில் முடிவடைந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று 19ம் திகதி கராச்சியில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

லஹிரு குமாரா மற்றும் லசித் எம்புலடேனியாவின் அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் அணியை முதல் இன்னிங்கஸில் 191 ஓட்டங்களுக்கு சுருட்டியது இலங்கை.



பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 63, பாபர் அசாம் 60 ஓட்டங்கள் எடுத்தனர். அணித்தலைவர் அசார் அலி, யாசிர் ஷா மற்றும் முகமது அப்பாஸ் டக் அவுட்டாகினர்.

இலங்கை தரப்பில் லஹிரு குமாரா, லசித் எம்புலடேனியா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

விஷவா பெர்னாண்டோ இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது, முதல் நாள் ஆட்டம் முடியவுள்ள நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker