CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்: பிசிசிஐ ஒப்புதல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 8 அணிகளை 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்கபிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 10 அணிகள் 2022 சீசனில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.