TAMIL
2020 ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியீடு: முதல் போட்டியிலே மோதும் மிகப் பெரும் அணிகள்
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இந்தாண்டிற்கான போட்டி அட்டவணை சற்று முன் வெளியானது.
கடந்த 2007 முதல் இந்தியாவில், உள்ளூர் தொடராக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுவதால், ஒவ்வொரு போட்டி அனல் பறக்கும்.
இதன் காரணமாகவே இந்த தொடர் ஒவ்வொரு ஆண்டும், வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
இதில் முதல் போட்டி மார்ச் மாதம் 29-ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
கடந்தாண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை வெற்றிப் பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
ஐபில் தொடரை பொறுத்தவரை சென்னை, மும்பை அணிகளுக்கு ரசிகர்கள் மற்ற அணிகளை விட சற்று அதிகம், இதன் காரணமாக இரு அணிகள் மோதும் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.