TAMIL
2020 ஐபிஎல் கோப்பை வெல்வதற்கு இந்த அணிக்கே அதிக வாய்ப்பு! அடித்து கூறும் CSK வீரர் ஹர்பஜன் சிங்
இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், எந்த அணி கோப்பையை ஜெயிக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், வரும் மார்ச் மாதம் 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி மும்பையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை வீரர்கள் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பயிற்சியை துவங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் வந்த சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில், பஞ்சாப் தவிர்த்து அதிக ரசிகர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.
என்னுடைய 17-வது வயதில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினேன். முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தது எனது சாதனையாக இன்றும் உள்ளது.
தொடர்ந்து கிரிக்கெட்டில் பயணம் செய்த நான் இப்போது முதல் முறையாக படத்தில் நடிக்கிறேன். அதுவும் தமிழில் எனது முதல் படம் என்பது பெருமையாக உள்ளது.
கிரிக்கெட்டில் கொடுத்த ஆதரவை எனது திரையுலக பயணத்திலும் நீங்கள் அளிக்க வேண்டும்.
இந்த ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணியே கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் சென்னை அணிக்கு எப்போதும் போல் ஆதரவு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.