TAMIL

20 ஓவர் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

லக்னோவில் நேற்றிரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கரிம் ஜனத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.


Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker