TAMIL
2 சிக்ஸர்களை அடித்துவிட்டு பவுலரிடம் மன்னிப்பு கேட்ட வாட்சன்! அவரே சொன்ன நெகிழ்ச்சி காரணம்
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான வாட்சன், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரமிடம் மன்னிப்பு கேட்டதாக தற்போது கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக ஏராளமான விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதனால் காட்டுத் தீயில் சிக்கி காயங்களுடன் போராடும் விலங்குகளை காப்பாற்றுவதற்கும், காட்டினை பழையது போன்று மாற்றுவதற்கும் நிவாரணம் திரட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நிதி திரட்டும் வகையில் ஆல்ஸ்டார் கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.
குறித்த போட்டியில், கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும், பாண்டிங் தலைமையிலான அணியும் மோதின. சச்சின், லாரா, யுவராஜ் சிங், வாசிம் அக்ரம் என பல்வேறு ஜாம்பவான்கள் அந்த போட்டியில் பங்கேற்று விளையாடினர்.
இதில் பாண்டிங் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக சென்றுள்ள அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின்
முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், நான் அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டுவதற்காக நடந்த போட்டியின் போது, வாசிம் அக்ரமின் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்ததை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன்.
வாசிம் அக்ரம் என் ஹீரோக்களில் ஒருவர் இப்போதும் அவர் ஒரு தரமான மனிதர்.
குறிப்பாக அந்த இரண்டாவது சிக்சரை அடித்த போது மிகவும் மோசமாக உணர்ந்தேன் அப்போது அக்ரமிடம் சென்று மன்னிப்பும் கேட்டேன் என்று கூறியுள்ளார்.
ஆல்ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் கில்கிறிஸ்ட் அணி சார்பில் விளையாடிய வாட்சன், பாண்டிங் அணியில் ஆடிய வாசிம் அக்ரம் வீசிய ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்கவிட்டதால், உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளரான அக்ரமை வெளுத்துவிட்டார் என்று அன்றைய செய்திகளில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.