CRICKETLATEST UPDATESNEWSTAMIL
2-வது சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், கருண் நாயர், முஜீப் உர் ரஹ்மான், கேதார் ஜாதவ்

ஐபிஎல் 2021 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்றது. சர்வதேச போட்டிகளில் அனுபவம் பெற்ற ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், கருண் நாயர், சாம் பில்லிங்ஸ், முஜீப் உர் ரஹ்மான், பென் கட்டிங் போன்றோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
2-வது சுற்றின்போது அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய்க்கும், பென் கட்டிங்கை 75 லட்சம் ரூபாய்க்கும், கருண் நாயரை 50 லட்சம் ரூபாய்க்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
முஜீப் உர் ரஹ்மானை 1.50 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. சி. ஹரி நிஷாந்த்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.