CRICKETLATEST UPDATESNEWSTAMIL

1968-க்குப் பிறகு இப்படி ஒரு சாதனைப் படைத்த ரோகித் சர்மா- கில் ஜோடி: பலன் கிடைக்குமா?

ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் 309 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட் உள்ளது.

இந்த போட்டியில் தொடக்க ஜோடியான ரோகித் சர்மா – ஷுப்மான் கில் ஆகியோர் இரண்டு இன்னிங்சிலும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை பயன்படுத்த தவறிவிட்டனர்.

இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 27 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்றைய 2-வது இன்னிங்சிலும் 22.1 ஓவரில் 71 ரன்கள் எடுத்தன. இரண்டு இன்னிங்சில் தொடக்க ஜோடியா 50 ரன்களை கடந்தனர். 
இதற்கு முன் ஆஸ்திரேலியா மண்ணில் 1968-ல் அபித் – பரூக் இன்ஜினீயர் ஜோடி இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்திருந்தது. அதன்பின் தற்போது ரோகித் சர்மா – ஷுப்மான் கில் இந்த சாதனையைப் படைத்துள்ளது.

முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 26 ரன்களும், ஷுப்மான் கில் 50 ரன்களும் அடித்தனர். 2-வது இன்னிங்சில் ஷுப்மான் கில் 31 ரன்களும், ரோகித் சர்மா 52 ரன்களளும் அடித்தனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker