CRICKETLATEST UPDATESNEWSTAMIL
195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது. பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட் ஆகியோர் களமிறங்கினர். ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். மேத்யூ வேட் 30 ரன்னில் அஷ்வினிடம் வீழ்ந்தார்.
அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே நிதானமாக ஆடினார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின்னர் லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 124 ஆக இருந்தபோது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அவரது ஓவரில் டிராவிஸ் ஹெட் (38 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
அடுத்த 10 ரன்களுக்குள் லபுசாக்னேவும் வெளியேறினார். அவர் 132 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்திருந்தார்.
அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சரிய, ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.